போர் துவங்கி 417 நாட்கள் எட்டிய நிலையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உக்ரைன் போர் கைதிகள் 100 பேரை விடுவித்தது ரஷ்யா!!
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கி 417 நாட்களை எட்டிய நிலையில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உக்ரைன் போர் கைதிகள் 100 பேர் விடுவிக்கப்பட்டனர். உக்ரைன் மீதான ரஷ்ய போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பது தான் உலக நாடுகளின் எதிர்பார்ப்பு ஆகும். போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு சமரச பேச்சுவார்த்தைக்கு தான் உண்டு.
ஆனால் உக்ரைனுக்கு ராணுவ தளவாடங்களை அனுப்பி வரும் மேற்கத்திய நாடுகள் போரை முடிவுக்கு கொண்டு வர ஆர்வம் காட்டவில்லை என்பதே ரஷ்யாவின் குற்றச்சாட்டு.
இரு நாடுகள் இடையே போர் தொடங்கி 417 நாட்களை எட்டிய நிலையில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உக்ரைன் போர் கைதிகள் 100 பேரை ரஷ்யா விடுவித்துள்ளது. வெள்ளை கொடிகளுடன் உக்ரைன் எல்லைக்கு அனுப்பப்பட்ட அவர்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைய ரஷ்ய ராணுவ அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு முன்பும் இரு நாடுகளும் போர் கைதிகளை பரஸ்பரம் விடுவித்தனர்.