பிரான்சில் 750 ஹெக்டேர் பரப்பளவில் கொழுந்துவிட்டு எரியும் காட்டு தீ..!!!
தென்மேற்கு பிரான்சில் கடந்த சில நாட்களாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த காட்டு தீ அந்நாட்டின் எல்லையை தாண்டி ஸ்பெயின் நாட்டிற்குள் நுழைந்துள்ளது. பிரான்சின் எல்லையில் உள்ள கட்டலோனியாவில் உள்ள ஸ்பானிய நகரான போர்ட்போவை பயங்கர காட்டுத் தீ அச்சுறுத்தி வருகிறது. பிரெஞ்சு எல்லையில் தீ பரவி ஸ்பெயினுக்கு பரவியது, தீ பரவி வருவதால் சில பண்ணை வீடுகள் மற்றும் குடியிருப்புகளில் உள்ளவர்கள் வெளியேற்ற தொடங்கியுள்ளனர்.
எல்லையின் இரு புறங்களிலும் குறைந்தது 750 ஹெக்டேர் நிலம் எரிந்து தீக்கிரையானது. இரு நாடுகளையும் இணைக்கும் ரயில்கள் மற்றும் சாலைகளும் மூடப்பட்டன. தீயை அணைக்கும் பணியில் ஒன்பது தீயணைப்புக் குழுக்களை அனுப்பியுள்ளதாக கட்டலான் அரசாங்கம் தெரிவித்தது. இதற்கிடையில், மத்திய தரைக்கடல் கடற்கரையில் உள்ள மற்றொரு நகரத்தின் அருகே இரண்டாவது தீ தொடங்கியது. நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டனர். கோடையின் கடுமையான வெப்பத்தால் காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருகிறது.