இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அதிரடி கணிதத்தை கட்டாயமாக்க புதிய நிபுணர் குழு அமைப்பு: 18 வயது வரை படித்தே தீரணும்!!
இங்கிலாந்து மக்களுக்கு கணக்கு பாடம் என்றாலே ஆகாது. இதனால் அங்குள்ள குழந்தைகள் கணக்கில் ரொம்பவே வீக். பள்ளியில் கணக்கு பாடமே படிக்காமல் தவிர்க்கும் வகையிலான பாடத்திட்டம் அங்குள்ளது. 18 வயது வரை இளைஞர்கள் ஏதேனும் ஒரு வகையில் கணிதத்தை படிக்காத சில வளர்ந்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. இந்நிலையில், இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றதுமே, 18 வயது வரை அனைவரும் ஏதேனும் ஒரு கணித பாடத்தை படிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இதற்காக தற்போது இங்கிலாந்து அரசு புதிய நிபுணர் குழுவை அமைத்துள்ளதாக பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். லண்டனில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரிஷி சுனக், ‘‘ கணிதத்திற்கு எதிரான மனநிலையை நாம் மாற்ற வேண்டும் என்றார்.
மனைவி வர்த்தகம் சுனக்கிற்கு சிக்கல்
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மனைவி அக்ஷதா வர்த்தம் தொடர்பாக அங்கு பிரச்னை எழுந்துள்ளது. மனைவி வர்த்தகத்திற்கு உதவியாக கொள்கையை மாற்றியதாக குற்றச்சாட்டு அடிப்படையில் நாடாளுமன்ற குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது பிரதமர் பதவியில் உள்ள ரிஷி சுனக்கிற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது