நிறைக்கேற்ப முட்டை விற்பனை!!
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை திட்டத்தால் ஏற்படுகின்ற பிரச்சினைகளைத் தீர்க்க, முட்டைகளை நிறை அடிப்படையில் விற்க வேண்டும் என அகில இலங்கை பண்ணைகள் சங்கத் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
“தமது உற்பத்திகளின் விலைகளை தீர்மானிப்பதால் வெதுப்பகங்கள் ஏற்கனவே முட்டைகளை நிறை அடிப்படையில் தான் கொள்வனவு செய்கின்றன.
ஒரு கிலோகிராம் முட்டைப் பொதியில் குறைந்தது 16 தொடக்கம் 20 வரையான முட்டைகள் இருக்கும்.
முட்டைகள் நிறை அடிப்படையில் விற்கப்படுவது நுகர்வோருக்கு நிவாராணமாக இருக்கும்“ என குணசேகர தெரிவித்தார்.