பெண் அதிகாரிகளை இழுத்து சென்று தாக்கிய மணல் மாபியா கும்பல்- 44 பேர் கைது!!
பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாட்னா அருகே உள்ள பிஹ்டாவில் சட்ட விரோதமாக சுரங்கம் தோண்டப்படுவதாகவும், மணல் கடத்தப்படுவதாகவும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து பெண்கள் அதிகாரிகள் தலைமையில் குழு அங்கு சென்று சட்ட விரோதமாக மணல் அகற்றுவதை தடுத்து அப்போது ஒரு கும்பல் பெண் அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்கியது. 2 பெண் அதிகாரிகளை அந்த கும்பல் இழுத்து சென்று பயங்கரமாக தாக்கியது. மணல் மாபியா கும்பல் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து அதிகாரிகளை தாக்கியது.
பெண் அதிகாரியை இழுத்து சென்று தாக்கிய வீடியோவாக வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்தனர். மணல் மாபியா கும்பலிடம் இருந்து அதிகாரிகளை போலீசார் மீட்டனர். தாக்குதலால் பெண் அதிகாரிகளான அமியா குமாரி. பர்ஹீன் மற்றும் மாவட்ட சுரங்க அதிகாரி கவுரவ் குமார் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக 44 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.