சீனாவின் உத்தேச படையெடுப்பை தடுக்க 400 ஏவுகணைகளை வாங்கும் தைவான்!
தைவான் பெரிய போர்க் கப்பல்களைத் தாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் 400 ஏவுகணைகளை Boeing நிறுவனத்திடமிருந்து வாங்கவுள்ளது.
சீனா மேற்கொள்ள திட்டமிடும் உத்தேசப் படையெடுப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் தைவான் குறித்த ஏவுகணைகளை வாங்க தீர்மானித்துள்ளது.
இதற்கு முன்னர் தைவான் கப்பலில் இருந்து செலுத்தக்கூடிய Harpoon வகை ஏவுகணைகளை வாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் நிலத்தில் இருந்து செலுத்தக்கூடிய ஏவுகணைகளை தைவான் வாங்குவது இதுவே முதன்முறையாகும்.
கரையோர பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு தைவான் குறித்த ஏவுகணைகளை பயன்படுத்தும் எனக் கூறப்படுகின்றது.
சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த ஏவுகணைகளை தைவான் வாங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.