கர்நாடக சட்டசபை தேர்தல்: கோடீசுவர வேட்பாளர்களின் சொத்து விவரம்!!
கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. அவர்களும் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்கள். வேட்புமனு தாக்கல் நாளையுடன் (வியாழக்கிழமை) நிறைவு பெறுகிறது. இதனால் முக்கிய வேட்பாளர்கள் உள்பட பலர் அந்தந்த பகுதிகளில் உள்ள தேர்தல் அலுவலகங்களுக்கு படையெடுத்து வேட்புமனுவை தாக்கல் செய்து வருகிறார்கள். மேலும் பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களையும் வேட்பாளர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், கோடீசுவர வேட்பாளர்கள் சிலரை இங்கு பார்ப்போம். 1. எச்.டி.குமாரசாமி (சென்னப்பட்டணா தொகுதி ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர்) * மொத்த சொத்து மதிப்பு ரூ.46.57 கோடி * மனைவி பெயரில் ரூ.124 கோடி மற்றும் 3 கிலோ 800 கிராம் தங்கம் * கடன் ரூ.17 கோடி * 5 கிரிமினல் வழக்குகள் 2. எச்.டி.ரேவண்ணா (ஒலேநரசிப்புரா தொகுதி ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர்) * மொத்த சொத்து மதிப்பு ரூ.44.37 கோடி * மனைவி பெயரில் ரூ.38 கோடி * 3 கிலோ தங்கம், 45 கிலோ வெள்ளி, 25 காரட் வைரம் * கடன் ரூ.9 கோடி 3. விஜயேந்திரா (சிகாரிப்புரா தொகுதி பா.ஜனதா வேட்பாளர்)
* மொத்த சொத்து மதிப்பு ரூ.103 கோடி * மனைவி பெயரில் ரூ.21 கோடி * ஒரு டிராக்டர் 4. எம்.பி.பட்டீல் (பபலேஸ்வர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்) * மொத்த சொத்து மதிப்பு ரூ.105 கோடி * மனைவி பெயரில் 34 கோடி * 5 கிரிமினல் வழக்குகள் 5. ஆர்.அசோக் (பத்மநாபநகர் பா.ஜனதா வேட்பாளர்) * மொத்த சொத்து மதிப்பு ரூ.5.28 கோடி * மனைவி பெயரில் ரூ.42 லட்சம் * கடன் ரூ.97.78 லட்சம் 6. முனிரத்னா (ஆர்.ஆர்.நகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர்)
* மொத்த சொத்து மதிப்பு ரூ.270 கோடி * அசையும் சொத்து ரூ.31.34 கோடி * அசையா சொத்து ரூ.239 கோடி * மனைவி பெயரில் ரூ.22 கோடி * கடன் ரூ.93 கோடி 7. உதய் கருடாச்சார் (சிக்பேட்டை பா.ஜனதா வேட்பாளர்) * மொத்த சொத்து மதிப்பு ரூ.200 கோடி * 22 கிலோ தங்க நகைகள் * கடன் ரூ.47 கோடி 8. அருணாலட்சுமி (பல்லாரி நகர தொகுதி கல்யாண ராஜ்ஜிய பிரகதி கட்சி வேட்பாளர், ஜனார்த்தன ரெட்டியின் மனைவி) * மொத்த சொத்து மதிப்பு ரூ.200 கோடி * அசையும் சொத்து மதிப்பு ரூ.96 கோடி * அசையா சொத்து மதிப்பு ரூ.104 கோடி * ரூ.16 கோடி தங்க நகைகள்.