’மே ’யிலிருந்து கட்டணங்கள் உயர்த்தப்படும்!!
மே மாதம் 30 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில், அமெரிக்க வெளியுறவுத்துறையானது குடியேற்றம் அல்லாத விசா ( Non-immigrant ) விண்ணப்பப்படிவ செயலாக்க கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக ஐக்கிய அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
வருகையாளர் விசா (Tourist Visa), பரிமாற்ற வருகையாளர் விசா (Exchange Visitors Visa) மற்றும் மாணவர் விசா போன்ற விசாக்களுக்கு 160 ஐக்கிய அமெரிக்க டொலர்களிலிருந்து 185 அமெரிக்க டொலர்களாக விண்ணப்ப கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.