சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா..! இன்று ஐ.நா வெளியிட்ட புதிய அறிவிப்பு !!
உலக மக்கள் தொகையில் சீனா முதலிடத்தில் நீடிக்கின்ற நிலையில் அந்த நடுப்பகுதியில் சீனாவை விட இந்தியாவில் சனத்தொகை அதிகரித்த அளவில் பதிவாகும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
குறிப்பாக கடந்த 03 ஆண்டுகளாக கொரோனா தொற்றுப் பரவல் சீன சனத்தொகையில் தாக்கம் செலுத்தியிருந்த நிலையில், இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலக மக்கள் தொகை நிலை – 2023 அறிக்கையை ஐ.நா.வின் மக்கள் தொகை நிதியம் இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, ”மக்கள் தொகையில் இந்தியா, இந்த ஆண்டு சீனாவை பின்னுக்குத் தள்ளும் என சுட்டிக்காட்டப்படுள்ளது.
இந்த ஆண்டின் இறுதியில் இந்திய மக்கள் தொகை 142 தசம் 86 கோடியாக இருக்கும் அதேநேரம், சீன மக்கள் தொகை 142 தசம் 57 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சனத்தொகையில் மூன்றாம் இடம் வகிக்கும் அமெரிக்காவில் மக்கள் தொகை 34 கோடியாக பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பை இந்தியா கடந்த 2011 ஆம் ஆண்டு எடுத்த போதிலும், கொரோனா தொற்று பரவல் நெருக்கடி காரணமாக 2021 ஆம் ஆண்டு எடுத்திருக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு இடம்பெறவில்லை.
இதனால் ‘மக்கள் தொகையில் இந்தியா, இந்த மாதம் சீனாவை பின்னுக்குத் தள்ளும் என்கின்ற போதிலும், சரியாக இந்த தினத்தில் அது நிகழும் என்பதை துல்லியமாகக் கூற முடியாது என மக்கள் தொகை பெருக்கம் சார்ந்த ஆய்வில் நிபுணத்துவம் பெற்ற ஐநா அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த ஆண்டின் இறுதியில் உலக மக்கள் தொகை 804.50 கோடியாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இதில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொகையை இந்தியாவும், சீனாவும் கொண்டிருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த இரு நாடுகளிலும் மக்கள் தொகை பெருக்க வேகம் தற்போது குறைந்து வருகிறது.
கடந்த 60 ஆண்டுகளாக உயர்ந்து வந்த சீன மக்கள் தொகை கடந்த ஆண்டு முதல்முறையாக குறையத் தொடங்கிய நிலையில், தொடர்ந்து குறைவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சீன மக்கள் தொகை சரிவு அதன் பொருளாதாரத்திலும், உலகிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்தியாவில் கடந்த 2011 முதல் அதன் சராசரி மக்கள் தொகை வளர்ச்சி 1.2 சதவீதமாக பதிவாகியுள்ளது.