சபை அங்கிகாரம் பெற அமைச்சரவை அனுமதி !!
சர்வதேச நாணய நிதியத்துடனான (ஐஎம்எப்) உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தின் அங்கிகாரத்தைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்த்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் 3 பில்லியன் அமெரிக்க டொலர் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கு கடந்த மாதம் 22 ஆம் திகதி அனுமதி வழங்கப்பட்டது.
48 மாத காலப்பகுதிக்கு வழங்கப்பட்டுள்ள இந்த கடன் தொடர்பான ஆவணங்கள் ஏற்ககெனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டை உறுதி செய்துகொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட பிரதான கொள்கைகளை சட்டமாக மாற்றுவதற்கு பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.