;
Athirady Tamil News

மூன்று இலட்சம் கோடீஸ்வரர்களுடன் மீண்டும் முதலிடம் பிடித்த உலகின் பணக்கார நகரம் !!

0

அமெரிக்காவின் நியுயோர்க் நகரம் மீண்டும் உலகின் பணக்கார நகரமாக மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு உலகின் பணக்கார நகரங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, 2023-ம் ஆண்டு முதல் இடத்தில் இருக்கும் நியுயோர்க் நகரில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 03 லட்சத்தை தாண்டும்.

அந்த நகரத்தில் 340,000 கோடீஸ்வரர்கள் வாழ்கிறார்கள், மேலும் பில்லியனர்களின் எண்ணிக்கை 58 என்று கூறப்படுகிறது.

உலகின் பணக்கார நகரங்களில், 290,300 மில்லியனர்கள் வசிக்கும் ஜப்பானின் டோக்கியோவுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. மேலும் 285,000 மில்லியனர்கள் வசிக்கும் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ பகுதிக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.

உலகின் 10 பணக்கார நகரங்களில் லொஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ உள்ளிட்ட 04 அமெரிக்க நகரங்கள் இடம்பிடித்திருப்பது சிறப்பாகும். சீனாவின் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய், லண்டன், சிங்கப்பூர், ஹொங்கொங் மற்றும் சிட்னி ஆகியவை 2023 ஆம் ஆண்டில் உலகின் 10 பணக்கார நகரங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.