;
Athirady Tamil News

நாடாளுமன்ற குழு விசாரணையை தொடர்ந்து மனைவியின் வர்த்தக தொடர்பை வெளியிட்டார் ரிஷி சுனக்!!

0

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் குழந்தை பராமரிப்பாளர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. பிரபல குழந்தை பராமரிப்பு மையமான கோரு கிட்ஸ் நிறுவனத்தில் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி பங்குதாரராக உள்ளார். இந்த பட்ஜெட் அறிவிப்பு மூலம் அக்ஷதா மூர்த்தி பயனடையும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இங்கிலாந்து நாடாளுமன்ற நடத்தை விதியின்படி, அவை நடடிவக்கை (பட்ஜெட்) மூலம் உறுப்பினர்கள் எந்த வகையில் பலனடைந்தாலும் அது குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பது முக்கியமாகும். ஆனால் அக்ஷதாவின் வர்த்தக பலன்களை ரிஷி சுனக் மறைத்ததால், அவருக்கு எதிராக நாாளுமன்ற குழு விசாரணை தொடங்கி உள்ளது.

இதைத்தொடர்ந்து மனைவியின் வர்த்தக தொடர்பை ரிஷி சுனக் வெளியிட்டு உள்ளார். தற்போது வெளியிடப்பட்டு உள்ள இங்கிலாந்து மந்திரிகளின் சொத்து பட்டியலில் ரிஷி சுனக் மனைவியின் வர்த்தக தொடர்புகள் சேர்க்கப்பட்டு உள்ளன.அதன்படி, ‘பிரதமரின் மனைவி ஒரு முதலீட்டாளர். கேடமரன் வென்ச்சர்ஸ் யுகே லிமிடெட் என்ற மூலதன முதலீட்டு நிறுவனம் மற்றும் பல நிறுவனங்களில் நேரடி பங்குகளை அவர் வைத்திருக்கிறார்’ என்று கூறப்பட்டு இருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.