சுத்தி நிர்வாண அழகிகள்! 12 கப் மது குடித்த இளைஞர்! சுருண்டு விழுந்து பலி! அடுத்து நடந்த ஷாக் சம்பவம்!!
போலாந்து நாட்டில் உள்ள ஸ்டிரிப் கிளப் ஒன்றில் அடுத்தடுத்து 22 ஷாட் குடித்த இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நம்ம ஊரில் எப்படி கேளிக்கை விடுதிகள் இருக்கிறதோ.. அதுபோல வெளிநாடுகளில் ஸ்டிரிப் கிளப்கள் இருக்கிறது. அரைகுறை ஆடையுடன் பெண்கள் ஆடுவதுதான் இந்த ஸ்டிரிப் கிளப்.
இதற்கு அங்கெல்லாம் பெரிய வரவேற்பு இருக்கும். இளசுகள் தொடர்ந்து பெரிசுகள் வரை ஸ்டிரிப் கிளப்களில் கூட்டம் அலைமோதும்.. அங்கே அரைகுறை ஆடையுடன் ஆடும் பெண்களுக்குப் பணமும் கொட்டும்.
போலாந்து: அதேநேரம் அங்கே எதிர்பாராத விதமாக சில நேரங்களில் மோசமான சம்பவங்களும் அரங்கேறின. அப்படி போலாந்து நாட்டில் நடந்த சம்பவம் தான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. போலந்து ஸ்டிரிப் கிளப்பில் இரவு 1.30 மணி நேரத்தில்22 ஷாட்கள் குடித்த நபர் ஒருவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். அவர் ஆல்கஹாலால் ஏற்பட்ட விஷத்தால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. உயிரிழந்த நபர் 36 வயதான மார்க் சி என அடையாளம் காணப்பட்டுள்ளது. போலாந்து கிராகோவில் உள்ள வைல்ட் நைட் கிளப்பில் நண்பருடன் வந்தபோது ஏற்கனவே அந்த இளைஞர் குடிபோதையில் தான் இருந்தார். அவர் தனது நண்பருடன் வந்துள்ளார். ஏற்கனவே மது போதையில் இருந்ததால், அவர் மது வேண்டாம் என்றே முதலில் மறுத்துள்ளார். இருப்பினும், அங்கே இருந்த ஊழியர்கள் தான் அவரை வலியுறுத்தி மதுவைக் கொடுத்துள்ளனர். பவர்புல் ஷாட்டை தொடர்ச்சியாகக் கொடுத்துள்ளனர். 1.30 மணி நேரத்தில் 12 ஷார்ட்கள் கொடுத்துள்ளனர்.
உயிரிழப்பு: இதனால் மதுபோதை அவருக்குத் தலைக்கு ஏற அவர் அப்படியே சரிந்துவிட்டார். அதன் பின்னரும் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், கிளப்பில் இருந்த ஊழியர்கள் அவரிடம் இருந்த 2,200 போலந்து பணத்தை (ரூ. 42,816) திருடியுள்ளனர். அவர் இறக்கும் போது குறைந்தபட்சம் 0.4 சதவிகிதம் ரத்தத்தில் ஆல்கஹால் இருந்தது. நமது ரத்தத்தில் 0.3 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமாக ஆல்கஹால் இருந்தால் உடலில் விஷம் ஏற்படும் ஆபத்து இருக்கிறது. இந்த சம்பவம் கடந்த 2017இல் நடந்துள்ளது. ஆனால், இதில் போலீசார் இப்போது தான் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் 58 பேர் மீது போலந்து காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் அவர்களுக்கு உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படாததே உயிரிழப்பிற்குக் காரணம் என்பது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் 700+ பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், சந்தேகத்திற்கிடமான நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறுகையில், “அந்த நபர் தொடர்ந்து குடித்ததால் உடலில் ஏற்பட்ட விஷமே உயிரிழப்பிற்குக் காரணம். அந்த நபர் போதையால் சுயநினைவை இழந்து, ஆல்கஹால் விஷம் காரணமாக உயிரிழந்துள்ளார். அந்த நபருக்கு உரிய நேரத்தில் மருத்துவ உதவி வழங்கப்படவில்லை. அதுவே உயிரிழப்பிற்குக் காரணமாகும்” என்றனர்.
அடுத்து நடந்த ஷாக்: இது ஏதோ அவருக்கு மட்டும் நடந்த சம்பவம் இல்லை. அந்த ஸ்டிரிப் கிளப்பில் வரும் அனைவருக்கும் அவர்கள் அளவுக்கு அதிகமாக மது கொடுத்துள்ளனர். அவர்கள் மது போதையில் சரியும் போது, அவர்களிடம் இருந்து பணத்தைக் கொள்ளையடிப்பதையும் அவர்கள் வாடிக்கையாக வைத்துள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பணம் இல்லையென்றால் அவர்களிடம் இருக்கும் கார்டு மூலமும் பணத்தைக் கொள்ளையடித்துக் கொள்வார்களாம். உங்கள் உடலால் பிராசஸ் செய்யும் அளவை காட்டிலும் மிக வேகமாக மதுக் குடிக்கும் போது தான் ஆல்கஹால் விஷம் ஏற்படும். குழப்பம், மயக்கம், பேச முடியாமல் போவது, ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள். நிற்கவும் நடக்கவும் முடியாது. ஒழுங்கற்ற சுவாசம், மற்றும் வலிப்பு ஏற்படும். உரியச் சிகிச்சை இல்லையென்றால் உயிரிழப்பு ஏற்படும் ஆபத்தும் உள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.