இஸ்ரேலிய – இந்திய பொருளாதாரத்துக்கு இடையேயான ஒத்துப்போகும் தன்மையால் நான் ஈர்க்கப்பட்டுள்ளேன் – இஸ்ரேலிய அமைச்சர் நிர் பர்கத்!!
இஸ்ரேலிய மற்றும் இந்திய பொருளாதாரத்துக்கு இடையேயான ஒத்துப்போகும் தன்மையால் நான் ஈர்க்கப்பட்டுள்ளேன் என இஸ்ரேலின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர் பர்கத் தெரிவித்துள்ளார்.
தனது இந்திய விஜயம் குறித்து குறிப்பிடுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
இஸ்ரேலிய பொருளாதாரம் மற்றும் இந்திய பொருளாதாரம் இடையே ஒத்துழைக்கும் வாய்ப்பால் நான் ஈர்க்கப்பட்டேன். ஆனால், அதற்கு முன், இந்த இரு நாட்டு மக்களுக்கும் இடையேயான நட்பை நான் குறிப்பிட விரும்புகிறேன்.
இஸ்ரேலியர்கள் இந்தியர்களை நேசிக்கிறார்கள். இந்தியர்கள் இஸ்ரேலியர்களை நேசிக்கிறார்கள்.
இந்த இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான தொடர்பை எடுத்துக்காட்டும் வகையில் 2000 ஆண்டுகளாக சிறந்த வரலாற்றுப் பதிவு எம்மிடம் உள்ளது.
உலகம் முழுவதும் யூதர்களுக்கு சவால்கள் நிறைந்திருந்தபோதும், இந்தியாவில் எப்போதும் பாதுகாப்பாக வாழ்வதையும், வணிக ரீதியில் செயற்படுவதையுமே நாங்கள் உணர்ந்துள்ளோம். இது எமது எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியமானது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இரு அரச தலைவர்களும் நட்பு மிக்கவர்களாக உள்ளனர்.
இந்தியாவும் இஸ்ரேலும் வர்த்தக ரீதியான வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். அத்தோடு, விரைவில் பொருளாதாரத்தில் உச்சம் தொட்ட மூன்றாவது நாடாக இந்தியா காணப்படும்.
தற்போது மோடி மற்றும் நெதன்யாகு ஆகிய இருவரின் அரசாங்கங்களும் நட்புறவு கொண்டுள்ளன. இவர்கள் இருவரும் தத்தமது பொருளாதாரத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது எப்படி என்பதை நன்கு புரிந்துகொண்டுள்ளனர்.
மேலும், பல சவால்களை எதிர்கொண்டு, பிரச்சினைகளுக்கு தீர்வு காண எவ்வாறு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது என்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம்.
இஸ்ரேலை விட 150 மடங்கு பெரிய நாடு இந்தியா. எனவே, இந்தியா, இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான வணிக மேம்பாட்டுக்கு ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான விடயத்திலும் கவனம் செலுத்தியுள்ளோம் என்றார்.