ரஷ்ய படையெடுப்பின் பின் முதல் தடவையாக உக்ரேனுக்கு நேட்டோ தலைவர் விஜயம்!!
நேட்டோ அமைப்பின் தலைவர் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பேர்க் இன்று உக்ரேன் தலைநகர் கியேவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
2022 பெப்ரவரியில் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆரம்பமான பின்னர், உக்ரேனுக்கு நேட்டோ தலைவர் விஜயம் இசெய்தமை இதுவே முதல் தடவையாகும்.
“நேட்டோ செயலாளர் நாயகம் உக்ரேனில் உள்ளார். மேலதிக தகவல்களை இயன்றவரை விரைவாக வெளியிடுவோம்” என நேட்டோ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேட்டோவில் உக்ரேன் இணைவதை தடுப்பது இப்படையெடுப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்ற என ரஷ்யா கூறியுள்ளது.
ரஷ்யாவுடனான பிரச்சினையில் உக்ரேனுக்கு ஆதரவளிப்பதற்கு நேட்டோ உறுதியளித்துள்ளது.