1 மில்லியன் யூரோவை விரைவில் சம்பாதிக்கும் சுவிஸ் மக்கள் – எத்தனை ஆண்டுகள் தெரியுமா..!
சுவிஸ் மக்கள் சராசரியாக 15 ஆண்டுகளில் 1 மில்லியன் யூரோ சம்பாதிக்கிறார்கள். ஆனால், இதே பணத்தை சம்பாதிக்க சில நாட்டு மக்களுக்கு குறைந்தது 500 ஆண்டுகள் செல்லும் என ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Picodi.com ஆய்வாளர்கள், வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் மற்றும் சராசரி தேசிய சம்பளத்தைப் பெறுபவர்கள் 1 மில்லியன் யூரோ சம்பாதிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிட்டுள்ளனர்.
சராசரி ஊழியர் பெறும் அனைத்து நிகர கொடுப்பனவுகளையும் சேர்த்தால், சுவிட்சர்லாந்தில் வசிப்பவர் தனது முதல் மில்லியன் யூரோக்களை மிக வேகமாக சம்பாதிப்பார் என்று பகுப்பாய்வு காட்டுகிறது.
அதாவது சுவிஸ் குடிமகன் சராசரியாக 15 ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்களில் 1 மில்லியன் யூரோ சம்பாதிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டள்ளது.
அடுத்தபடியாக சிங்கப்பூரில் ஒருவர் 1 மில்லியன் யூரோ சம்பாதிக்க 18 ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்களும், லக்சம்பேர்க்கில் ஒருவர் 18 ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்களிலும், அமெரிக்காவில் 21 ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் மதங்களிலும் மற்றும் ஐஸ்லாந்தில் 22 ஆண்டுகள் மற்றும் ஐந்து மாதங்களிலும் சம்பாதிக்க முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த தரவரிசையில் ஸ்பெயின் 29வது இடத்தில் உள்ளது. சராசரி ஸ்பானிஷ் சம்பளத்தில், ஒருவர் 49 ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்களில் 1 மில்லியன் யூரோ சம்பாதிக்கலாம் என குறிப்பிடப்பட்டடுள்ளது.
இந்தியாவில் ஒருவருக்கு 1 மில்லியன் யூரோ சம்பாதிக்க சராசரியாக 158 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் ஆகும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், சில நாடுகளுக்கு இதே தொகையை சம்பாதிக்க 500 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
அதில், நைஜீரியாவுக்கு 554 ஆண்டுகள், உகாண்டாவுக்கு 559 ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள், எகிப்துநாட்டவருக்கு 646 ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள், மற்றும் பாகிஸ்தானியாருக்கு 664 ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் என கூறப்பட்டுள்ளது.