புடினை உச்சக்கட்ட கடுப்பில் ஆழ்த்திய விக்கிப்பீடியா !!
ரஷ்யா – உக்ரைன் போர் பற்றி போலியான தகவலை விக்கிப்பீடியா நிறுவனம் வெளியிடுவதாக, விக்கிப்பீடியாவிக்கு ரஷ்யா அபராதம் விதித்துள்ளது.
உலகளவில் பல மக்களின் பொக்கெட் டிக்ஸ்னரியாக திகழ்வது விக்கிபீடியா.
சந்தேகம் எதுவாயினும் உடனுக்குடன் தீர்த்துவைக்கும், கோடிக்கணக்கான மக்களின் நன் மதிப்பை பெற்று வரும் இணையத்தளமாக இருக்கும் விக்கிப்பீடியாவின் மீது தான் ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக ரஷ்யா – உக்ரைன் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ரஷ்யா தரப்பிலும், உக்ரைன் தரப்பிலும் ஏகப்பட்ட உயிரிழப்புகள், பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வரும் ரஷ்யாவிக்கு எதிராக உக்ரைனும் விடாது போராடி வருகிறது.
நேட்டோ உள்ளிட்ட பல அமைப்புகள், பல நாடுகள் உக்ரைனுக்கு தேவையான போர் ஆயுதங்களை வழங்கி வருகிறது.
வணிக ரீதியாக தற்போது மற்ற நாடுகளால் புறக்கணிக்கப்பட்ட ரஷ்யாவுக்கு சீனா மற்றும் இந்தியா மட்டுமே ஆதரவு கொடுத்து வருகிறது.
இந்நிலையில் ரஷ்யா – உக்ரைன் போரில் ரஷ்யாவின் சிறப்பு இராணுவ நடவடிக்கை, ரஷ்ய ஆயுதப்படை போன்றவற்றை இழிவுபடுத்தும் விதமாக பல கட்டுரைகள் வெளியானது. இந்த கட்டுரைகளை ரஷ்யா சட்டவிரோதம் என அங்கீகரித்துள்ளது.
இப்படி ரஷ்யாவால் சட்டவிரோதம் என அங்கீகரிக்கப்பட்ட கட்டுரைகளை விக்கிப்பீடியா தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.
இதனால் ரஷ்ய நீதிமன்றம் விக்கிப்பீடியாவுக்கு சுமார் 12 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் அபாரம் விதித்துள்ளது.
விக்கிப்பீடியாவின் மீது ரஷ்ய கடுமையான குற்றச்சாட்டு வைத்தும், அபராதம் விதித்த பின்னும் இந்தக் கட்டுரைகளை விக்கிப்பீடியா இன்னும் தனது இணையத்தளத்தில் இருந்து எடுக்கவில்லை என ரஷ்யாவின் ஊடக கண்காணிப்பாளர் ரோஸ்கேம்நாட்ஸோர் தெரிவித்துள்ளார்.