;
Athirady Tamil News

கத்தாரில் வெகு சிறப்பாக நடந்த ரமலான் – 2023 கவியரங்கம்! பல்வேறு கவிஞர்கள் பங்கேற்பு!!

0

கத்தாரில் “காப்பியக்கோ” ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தலைமையில் “ரமலான் – 2023” எனும் தலைப்பில் கவியரங்கம் வெகு சிறப்பாக நடைபெற்றது. உலகம் முழுக்க உள்ள இஸ்லாமியர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் பண்டிகையை வெகு சிறப்பாகக் கொண்டாடுவார்கள். அதன்படி இன்று ரமலான் பண்டிகை நாட்டில் கொண்டாடப்பட்டது.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் உலகெங்கும் நடந்து வருகிறது. அதன்படி கத்தாரில் “காப்பியக்கோ” ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தலைமையில் “ரமலான் – 2023” எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.

இலங்கை பாரம்பரிய உணவகமான “வெல் ஆன் ஹெரிடேஜ்” உணவகத்தில் நடைபெற்ற இந்த கவியரங்கிற்கு “காப்பியக்கோ” ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தலைமை தாங்கினார். இதில் இலங்கையைச் சேர்ந்த கவிஞர்கள் சுல்தான் பைசர், முஹம்மத் ஹசன், முஹம்மத் சமீன், ரியாஸ் மொஹமட், இம்திஸாஹசன் றெளஸான், ஆகிய ஐவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞர்கள் தஞ்சாவூரான், முகமது நிசார், செந்தமிழ் செல்வி ஆகிய மூவரும் பங்குகொண்டு சிறப்பாக தங்களது கவிதைகளைச் சமர்ப்பித்தனர்.

இந்த கவியரங்கத்துக்கு தலைமை வகித்த ஜின்னாஹ் ஷரிபுத்தீன் பேசும்போது, தமது கலை, இலக்கிய பயணத்தைப்பற்றியும், தமது இலக்கிய பயணத்தில் ஊடகவியலாளர்கள் பெருந்துணையாய் நின்றதையும், ஊடகவியலாளர்கள் இன்றேல் என்னைப்போன்ற கவிஞர்கள், கலைஞர்கள் உலகுக்கு அடையாளம் காட்டப்படாமல் போயிருப்பார்கள் என்றும், தாம் ஊடகத்துறையைச் சார்ந்த நண்பர்களுக்கு இத்தருணத்தில் நன்றி சொல்லிக்கொள்வதாகவும் நெகிழ்வுடன் பேசினார். மேலும், வளரும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் தமது வாசிப்பையும், எழுதும் பழக்கத்தையும், வழமையாக்கிக்கொள்ள வேண்டும் என்றும் இடையில் தொய்வு ஏற்படாமல் தொடர்ந்து எழுத வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வினை இலங்கையின் பிரபல ஊடகவியலாளர் எம்.ஜே. பிஸ்ரின் முஹம்மத் ஒருங்கிணைத்திருந்தார். நிகழ்வினை முஹம்மத் முனவ்வர் தொகுத்து வழங்கியுள்ளார். இக்கவியரங்க நிகழ்விற்குத் தமிழகத்தின் “மனிதநேய கலாச்சாரப் பேரவை” யும் அனுசரனையாளர்களில் ஒருவராக ஆதரவு தந்ததை அனைவரும் பாராட்டினார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.