;
Athirady Tamil News

ரூ. 21 லட்சம் மதிப்புள்ள வெள்ளி விளக்குகள் பறிமுதல் – அமைச்சர் மீது வழக்குப் பதிவு.. போலீஸ் அதிரடி!!

0

கர்நாடாக சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பில்கி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் முருகேஷ் நிரானி மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அமைச்சர் நிரானி சர்க்கரை ஆலை ஊழியர் குடியிருப்பில் இருந்து ரூ. 21 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள சில்வர் விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கர்நாடக தொழில்துறை அமைச்சரான முருகேஷ் நிரானி மீது காவல் துறையினர் இந்திய தண்டனை சட்டம் 171 H பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். “நாங்கள் முருகேஷ் நிரானி மீது வழக்குப் பதிவு செய்து இருக்கிறோம். குற்றவாளிகள் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் நிரானி சர்க்கரை ஆலை ஊழியர் குடியிருப்பில் வசிக்கின்றனர்.” என்று முதோல் காவல் நிலைய காவல் அதிகாரி தெரிவித்துள்ளார். போலீசாரிடம் இருந்து 28 கிலோ மதிப்புள்ள சில்வர் பொருட்களை பறிமுதல் செய்திருக்கிறோம் என்று மூத்த தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் முருகேஷ் நிரானி கருத்து தெரிவிக்கவில்லை.

கர்நாடக மாநிலத்தில் கடந்த மார்ச் 29 ஆம் தேதியில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அன்று முதல் இதுவரை தேர்தல் ஆணையம் சார்பில் ரூ. 253 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த வெள்ளி கிழமை மட்டும் நிரானி சர்க்கரை ஆலையில் இருந்து ரூ. 1 கோடியே 82 லட்சம் ரொக்கம், ரூ. 37 லட்சத்து 64 ஆயிரம் மதிப்புள்ள இலவச பொருட்கள், ரூ. 45 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக ரூ. 82 கோடியே 05 லட்சம் ரொக்கம், ரூ. 19 கோடியே 69 லட்சம் மதிப்பிலான இலவச பொருட்கள், ரூ. 56 கோடியே 67 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள், ரூ. 16 கோடியே 55 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள், ரூ. 73 கோடியே 8 லட்சம் மதிப்புள்ள 145.55 கிலோ தங்கம், ரூ. 4 கோடியே 28 லட்சம் மதிபபுள்ள 610 கிலோ சில்வர் பொருட்கள் தேர்தல் நடைபெற இருக்கும் கர்நாடக மாநிலத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.