ரஷ்யாவுக்கு எதிராக மூர்க்கமாக களமிறங்கும் மற்றொரு நாடு : காரணம் என்ன தெரியுமா?
உக்ரைன் – ரஷ்ய யுத்தக் காட்சிக்குள் மிகவும் மூர்க்கமாக நின்று செயலாற்றிக்கொண்டிருக்கின்ற ஒரு நாடு போலந்து.
உக்ரைனுக்கு நிகராக ரஷ்யா மீது மூர்க்கத் தனத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு நாடு என்றும் போலந்தை குறிப்பிடலாம்.
உக்ரைனுக்கான மேற்குலகின் ஆயுத வழங்கல்கள் அத்தனையுமே போலந்து வழியாகவே உக்ரைனுக்குள் கொண்டு செல்லப்படுகின்றன.
உக்ரைன் படையினருக்கான மேற்குலகின் பயிற்சிகளில் அனேகமானவை போலந்தில் வைத்துத் தான் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.
பயிற்சி நடவடிக்கைகளுக்காகவென்று அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளுக்குச் செல்லும் உக்ரைன் வீரர்கள் போலந்து வழியாகத்தான் சென்று கொண்டும் இருக்கிறார்கள்.
உக்ரைனின் பிரதான ஆயுதக் களஞ்சியங்கள், பின் தளங்கள் அனைத்துமே போலந்தில் இருப்பதாகத் தான் கூறப்படுகின்றது.
அது மாத்திரமல்ல, ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சண்டைகளில் ரஷ்யா தோற்கடிக்கப்பட்டு விட வேண்டும் என்க்னிறதான வெறி உக்ரைனுக்கு நிகராக போலந்துக்கும் இருப்பதை போலந்து வெளிப்படுத்தி வருகின்ற அதன் நடவடிக்கைகளை பார்க்கின்ற போது காணக்கூடியதாக இருக்கின்றது.