பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி ஏற்படும்: மாஜி பிரதமர் அப்பாஸி எச்சரிக்கை!!
நாட்டில் பொருளாதார,அரசியல் பிரச்னைகள் மிக மோசமாக உள்ளது என்றும் இதற்கு தீர்வுகாணாவிட்டால் ராணுவ ஆட்சி ஏற்படும் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாஸி எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷாஹித் ககான் அப்பாஸி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுகையில்,‘‘ அரசு அமைப்புகளுடனான மோதலுக்கு தீர்வு காண அரசியல் தலைமை பேச்சுவார்த்தை நடத்தாவிடில் ராணுவ சட்டம் அமல்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
ஏற்கனவே இது போன்ற சூழ்நிலைகளில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. நாட்டின் வரலாற்றின் பாதி காலம் ராணுவ ஜெனரல்களின் ஆட்சி தான் நடந்துள்ளன. சமூகங்கள் மற்றும் அரசு அமைப்புகளுக்கு இடையேயான மோதல் அதிகமானதால் அதிகார பலம் கொண்ட ராணுவம் தலையிட நேரிடும். வேறு வழியில்லையென்றால் இது தான் நடக்கும்’’ என்றார்.