பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராகவும் பௌத்தமயமாக்கலுக்கு எதிராகவும் ஹர்த்தால்!!
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராகவும் பௌத்தமயமாக்கலுக்கு எதிராகவும் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் நாளை (25) ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன.
இதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட வடக்கு, கிழக்கில் உள்ள 07 தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவளித்துள்ள நிலையில், வடக்கு, கிழக்கிலுள்ள மத தலைவர்களும் இதற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.
வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களை ஒடுக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட்டு அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதே ஹர்த்தாலின் பிரதான நோக்கமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கு வடகிழக்கு போக்குவரத்து சங்க பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகளும் ஆதரவு அளிப்பார்கள் என வடகிழக்கு அரசியல் கட்சிகள் நம்பிக்கை தெரிவிக்கும் அதே வேளையில் வடகிழக்கு அரசியல் கட்சிகளும் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்கவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.