கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!!
அரச பாடசாலைகளில் தரம் 02 முதல் தரம் 11 வரையான வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறித்த விண்ணப்பங்களை பதிவு தபாலில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலைகளில் தரம் 06 இல் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு இது பொருந்தாது என்று அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் கிடைக்கக்கூடிய வெற்றிடங்களுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை பாடசாலைகள் மேற்கொள்ளும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கடிதங்கள் எவற்றையும் இனி வெளியிட மாட்டோம் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.