யார் அந்த போதகர்.. ஏசுவை பார்க்க வைப்பதாக சொல்லி பகீர்.. தோண்ட தோண்ட சடலங்கள்.. அலறிய நைஜீரியா !!
கென்யாவில் ஏசு கிறிஸ்துவை பார்க்கலாம் என்று கூறி சர்ச்சுக்கு வந்த பக்தர்களை உண்ணாவிரதம் இருக்க வைத்ததில் 47 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் மத நம்பிக்கைகளை மிக தீவிரமாக கடைப்பிடிக்கும் நாடுகளில் கென்யாவும் ஒன்று. என்னதான் இந்த நாடு குடியரசு நாடாக இருந்தாலும் இங்கு மதத்தின் பெயரால்தான் அனைத்தும் நடக்கும். அரசு அதிகாரங்களில் கூட மத போதகர்கள், மத தலைவர்கள் முக்கிய இடத்தில் இருப்பதால் இந்த தீவிர மத பற்றை அரசு பெயரளவுக்கு மட்டுமே எதிர்த்து வந்திருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் நடந்த சம்பவம் ஒன்று உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அதாவது இந்திய பெருங்கடலின் ஓரத்தில் அமைந்திருக்கும் கென்யாவின் ஷகாஹோலா காட்டில் ஒரு வாரத்திற்கு முன்னர் சில கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த கல்லறைகள் ஆழமற்றதாக இருந்துள்ளன. ஆனால் தோண்ட தோண்ட சடலங்கள் கிடைத்துள்ளது. இதனையடுத்து கென்ய துணை ராணுவம் காவல்துறையின் உதவியுடன் அந்த பகுதி முழுவதும் தோண்டி பார்த்ததில் சுமார் 15 சடலங்கள் கிடைத்தன. இந்த காட்டில் பழங்குடியினர் யாரும் கிடையாது. இப்படி இருக்கையில் இங்கு எப்படி 15 உடல்கள் வந்தது என்பது குறித்து விசாரணையை மேற்கொண்டனர்.
விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது இந்த பகுதியில் ‘குட் நியூஸ் இன்டர்நேஷனல்’ எனும் பெயரில் ஒரு தேவாலயம் இயங்கி வந்திருக்கிறது. இந்த தேவாலயத்தில் வழிப்பாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள்தான் சடலமாக மீட்கப்பட்டனர். இதனையடுத்து தேவாலயத்தின் நிர்வாகிகள், பாதிரியார்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது உண்மை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்த தேவாலயத்தின் பாதிரியார்கள் தங்கள் சர்ச்சுக்கு வரும் மக்களில் மிகவும் பலவீனமான மனம் கொண்டவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.
பின்னர் அவர்களிடம் ஏசுவை காண வேண்டுமா? என்று ஆர்வத்தை தூண்டுவார்கள். அதன் பின்னர் சில சடங்குகள் நடக்கும். பின்னர் இறுதியாக உயிர் பலி நடக்கும். அதாவது ஏசுவை காண வேண்டும் எனில் உண்ணா நோண்பு இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இவரது பேச்சை கேட்ட பக்தர்கள் ஷகாஹோலா காட்டில் உண்ணா நோன்பு இருக்க தொடங்கினர். இப்படியாகதான் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து தேவாலயத்தின் தலைவர் ‘பால் மாக்கன்சி நெங்கே’ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தையடுத்து காவல்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனைகளை மேற்கொண்டர். இதனையடுத்து கென்யாவின் கடற்கரை நகரமான மாலிண்டி பகுதியில் தற்போது சுமார் 47 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒரே கல்லறையில் பல சடங்கள் வரை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோண்ட தோண்ட மேலும் பல சடலங்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக சரியான விசாரணை நடத்த வேண்டும் என்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இது குறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கிதுரே கிண்டிகி கூறுகையில், “தற்போது 800 ஏக்கர் பரப்பளவில் உள்ள காடு முழுவதுமாக மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. காட்டின் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் முக்கிய குற்றவாளிகளான என்தெங்கே, மூன்று கிராமங்களுக்கு நாசரேத், பெத்லஹேம் மற்றும் யூதேயா என பெயரிட்டுள்ளார். அதேபோல இந்த கிராமத்தில் இருப்பவர்களை உண்ணாவிரதம் இருக்கவும் தூண்டியுள்ளார். இது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.