கனடிய கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு பேரிடி – வெளியாகிய அறிவித்தல்..!
கனடாவில் கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு ஒரு முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் குடும்பங்கள் சிறுவர்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் காரினா கோல்ட் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
புதிய கடவுச்சீட்டு ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக அல்லது பழைய கடைவீச்சீட்டை புதுப்பித்து கொள்வதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு பொருத்தமான நேரம் இதுவல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பொதுத்துறை ஊழியர்கள் பாரிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஒரு பின்னணியில் அமைச்சர் பொதுமக்களிடம் கடவுச்சீட்டுக்களுக்கு தற்போதைக்கு விண்ணப்பம் செய்ய வேண்டாம் என கோரியுள்ளார்.
குறிப்பாக விண்ணப்பங்களுக்காக சில மூல ஆவணங்களை குடிவரவு திணைக்களத்தில் ஒப்படைப்பதன் மூலம் அசௌகரியங்களை எதிர் நோக்க நேரிடலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக சில மூல ஆவணங்கள் கடவுச்சீட்டு தேவைக்காக சமர்ப்பிக்கப்படும் போது தற்போதைய சூழ்நிலையில் இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்வதற்கு காலம் தாழ்த்தப்படுவதனால் மூல ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்கும் காலம் தாழ்த்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அனாவசியமான காத்திருப்புகளுக்கும் அசௌகரியங்களுக்கும் உள்ளாவதனை தவிர்க்க வேண்டுமாயின் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் இந்த தருணத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு அமைச்சர் மக்களிடம் கோரியுள்ளார்.