உக்ரைன் போரில் களமிறங்கிய புடினின் உறவினரின் மகன் !!
ரஷ்ய அதிபர் புடினின் நெருங்கிய உறவினரின் மகனும் உக்ரைனுக்கு எதிரான போரில் இணைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவின் மகன் இவ்வாறு போர்க்களத்தில் இறங்கியுள்ளார். நிகோலாய் பெஸ்கோவுக்கு இப்போது 33 வயது.
நிகோலாய் பெஸ்கோவ் வாக்னர் கூலிப்படையுடன் இணைந்து உக்ரைனில் 6 மாதங்களாக சண்டையிட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பக்மவுத் பகுதியில் அவர் சண்டையில் ஈடுபட்டு வந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.
நிகோலாய் பெஸ்கோவ் பிரிட்டனில் படித்தவர். சிறப்பாக ஆங்கிலம் பேசக்கூடிய நிகோலாய் பெஸ்கோவ், ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் பத்திரிகையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
வாக்னர் கூலிப்படையில் தனது நண்பர்களுடன் இணைந்து தானும் தனது கடமையை நிறைவேற்ற போர்க்களத்தில் இறங்கியதாக வெளிநாட்டு ஊடகங்களுக்கு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நிகோலாய் பெஸ்கோவ் தனது தந்தையின் உறவை உறுதிப்படுத்துவதைத் தடுப்பதற்காக போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தியதாக மேலும் தெரிவித்துள்ளார்.