புதிதாக 6,660 பேருக்கு தொற்று: கொரோனா தினசரி பாதிப்பு 3-வது நாளாக குறைந்தது!!
இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 6, 660 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. கடந்த 22-ந்தேதி பாதிப்பு 12,193 ஆக இருந்தது. நேற்று முன்தினம் 10,112 ஆகவும், நேற்று 6,904 ஆகவும் குறைந்த நிலையில், தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் பாதிப்பு சரிந்துள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 3.52 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 5.42 சதவீதமாகவும் உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 5 ஆயிரத்து 827 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 9,213 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 43 லட்சத்து 11 ஆயிரத்து 78 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 63,380 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 2,303 குறைவு ஆகும். தொற்று பாதிப்பால் நேற்று பஞ்சாப்பில் 4 பேர், டெல்லியில் 3 பேர் உள்பட 15 பேர் மற்றும் கேரளாவில் விடுபட்ட 9 மரணங்கள் என மேலும் 24 பேர் இறந்துள்ளனர். இதுவரை தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 369 ஆக உயர்ந்துள்ளது.