;
Athirady Tamil News

தெலுங்கானாவில் போலீசாரை தாக்கிய ஆந்திர முதலமைச்சரின் சகோதரி சர்மிளா ஜெயிலில் அடைப்பு!!

0

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா எனும் புதிய கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கியது முதலே தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவையும் அவரது அமைச்சர்களையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் தெலுங்கானா பொதுத் தேர்வானையம் நடத்திய தேர்வில் வினாத்தாள்கள் கசிந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சர்மிளா எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினார். இதையடுத்து தெலுங்கானா அரசு வினாத்தாள் வெளியானது குறித்து விசாரணை நடத்த சிறப்பு குழு ஒன்றை அமைத்தது.

நேற்று சர்மிளா ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து சிறப்பு குழு அலுவலகத்திற்கு செல்ல தனது தாயார் விஜயலட்சுமியுடன் வெளியே வந்தார். அப்போது வீட்டிற்கு வெளியே இருந்த போலீசார் சர்மிளா மற்றும் அவரது தாயாரை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த சர்மிளா பெண் போலீஸ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை தாக்கினார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து போலீசாரை தாக்கியதாக சர்மிளா மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சர்மிளாவை கைது செய்தனர்.

அவரை நாம் பள்ளி கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். சர்மிளாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதை தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள அஞ்சல் குடா ஜெயிலில் சர்மிளா அடைக்கப்பட்டார். சர்மிளாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது. சர்மிளாவின் தாயார் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.