உக்ரைன் தாக்குதல் நடத்தும் என்று கிரீமியா மக்கள் அச்சம்: ரஷ்ய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் காக்கும் என நம்பிக்கை!!
இயற்கை அழகு மிஞ்சியுள்ள கிரீமியாவில் உக்ரைன் தாக்குதல் நடத்தும் என்று அந்நாட்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். உக்ரைனின் ஒரு பகுதியான கிரீமியாவை ரஷ்யாவை கைப்பற்றி வாக்கெடுப்பு நடத்தி பொதுமக்களின் ஆதரவை பெற்றது. ஆனால், கிரீமியாவை மீண்டும் மீட்போம் என்று உக்ரைன் தெரிவித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ரஷ்யாவுடன் போர் மூண்டது.
இரு நாடுகள் இடையே 15 மாதங்களாக நீடிக்கும் போரில் அதிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அண்மையில் உக்ரைன் ராணுவம் கிரீமியம் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு ரஷ்யா பதிலடி கொடுத்தது. எனினும் உக்ரைன் எந்த நேரத்திலும் ஏவுகணை தாக்குதல் நடத்தும் என்ற அச்சம் கிரீமியா மக்களிடம் காணப்படுகிறது. எனினும் ரஷ்யாவின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் கிரீமியாவை காக்கும் என்ற நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.