;
Athirady Tamil News

நில உரிமையை வலியுறுத்தி பிரேசில் தலைநகரில் பழங்குடியினர் போராட்டம்: ஏப்.28-ம் தேதி வரை போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு!!

0

நில உரிமையை வலியுறுத்தி பிரேசில் தலைநகரில் தொடங்கிய போராட்டத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பாரம்பரிய உடையணிந்து நடனமாடி பேரணி சென்றவர்கள் நில உரிமையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். மலை காடுகள், மூலிகை மரங்கள் என இயற்கையாகவே செழுமையான நாடாக திகழ்கிறது பிரேசில். அங்கு பெரும்பாலான நிலங்கள் பழங்குடி மக்களின் கட்டுப்பாட்டிலே உள்ளன. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அந்நாட்டில் உள்ள பழங்குடி மக்களின் நிலத்தை அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

இதனை எதிர்த்து அந்நாட்டு பழங்குடி மக்களுக்காக செயல்பட்டு வரும் அமைப்புகள் இணைந்து 2004-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நடப்பாண்டு போராட்டம் அந்நாட்டின் தலைநகர் பிரேசிலியாவில் தொடங்கியுள்ளது. முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு நில உரிமையை வலியுறுத்தி ஊர்வலமாக சென்றனர். அனைவரும் அவர்களது பாரம்பரிய முறைப்படி உடை அணிந்து, நடனமாடி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.