திருப்பதியில் பக்தர்கள் வசதிக்காக ரோப்கார் திட்டப்பணிகள் தீவிரம்!!
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் 2.5 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். இதனால் பக்தர்களுக்கு ரோப் கார் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. திருப்பதி மாநகராட்சி கூட்டத்தில் ரோப் கார் அமைப்பதற்கு ஒப்புதல் அளித்து அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. அரசும் ரோப் காருக்கான திட்டத்தை தயாரித்து வருகிறது. திருப்பதி ரெயில் நிலையத்திற்கு வரும் பக்தர்கள் சிலர் பஸ் நிலையத்தில் இருந்து திருமலைக்கு பஸ்களில் செல்கின்றனர்.
மற்றவர்கள் அலிபிரியில் இருந்து வேண்டுதலின்படி நடந்தே திருமலைக்கு செல்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு திருப்பதி பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையம் வரை ஒரு வழி தடமும், பஸ் நிலையத்தில் இருந்து அலிபிரிக்கு மற்றொரு வழிதடத்தில் ரோப் கார் அமைத்து பயணத்தை எளிதாக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. பஸ் நிலையத்தில் இருந்து ரோப் கார் பாதை அமைக்கப்பட உள்ளது. அதன் அருகில் ஹெலிபேடும் அமைக்கப்பட உள்ளது. ஆரம்ப கட்ட பணிகள் முடிந்ததும் விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.