;
Athirady Tamil News

சர்க்கரை நோயாளிகள் ஆப்பிள் சாப்பிடலாமா?!!

0

ஆப்பிள் அனைவருக்கும் பிடித்த சுவையான பழம். இதில் வைட்டமின் சி, நார்ச்சத்து, ஆன்ட்டிஆக்சிடன்ட்ஸ் (Antioxidants) அதிகமாக உள்ளது. ஆப்பிளில் உள்ள ஆன்ட்டிஆக்சிடன்ட்ஸ் குறிப்பாக குயிர்செட்டின் (Quercetin), பிளோரிசின் (Phlorizin), கிளோர்ஜெனிக் ஆசிட் (Chlorgenic acid) ஆகியவை இன்சுலின் எதிர்மறை நிலையை (Insulin Resistance) குறைத்து இன்சுலின் செயல் திறனை அதிகப்படுத்தி, கணையத்தின் பீட்டா செல்களை இன்சுலினை அதிகமாக சுரக்க செய்கிறது.

ஆப்பிளில் உள்ள அதிகமான நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி ரத்தத்தில் சர்க்கரை அளவை உடனே அதிகமாகாமல் தடுக்கிறது. ஒரு ஆப்பிளில் 104 கலோரிகள், 27 கிராம் மாவுச்சத்து, 14 கிராம் சர்க்கரை இருக்கிறது. ஆப்பிளில் அதிகமான அளவு மாவுச்சத்து இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் அதிகமான அளவு சாப்பிடக்கூடாது. வைட்டமின்கள் மற்றும் ஆண்டிஆக்ஸிடன்ட்ஸ் தோலில் இருப்பதால் தோலுடன் சேர்த்து தான் ஆப்பிளை சாப்பிட வேண்டும். ஜூஸ் வடிவில் குடிக்க கூடாது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.