;
Athirady Tamil News

மாமியார், கணவருடன் தகராறில் 5 மாத கர்ப்பிணி கடலில் குதித்து தற்கொலை!!

0

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், கஜுவாக்கா பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் சாப்ட்வேர் என்ஜினியர். இவரது மனைவி சுவேதா (வயது 24). தம்பதிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. மணிகண்டனின் தாய் அப்பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். சுவேதா தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு மணிகண்டன் அலுவலக வேலையாக ஐதராபாத் சென்றார். இந்நிலையில் நேற்று மாலை மணிகண்டனின் தாய்க்கும் சுவேதாக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் மணிகண்டனின் தாய் ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்றுவிட்டார். மணிகண்டனுக்கு போன் செய்த சுவேதா உன்னுடைய தாய் அடிக்கடி என்னிடம் சண்டை போட்டு வருகிறார் என கூறினார். அப்போது மணிகண்டன் தனது தாய்க்கு சாதகமாக பேசியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வீட்டை பூட்டிய சுவேதா பக்கத்து வீட்டுக்காரரிடம் சாவியை கொடுத்துவிட்டு விசாகப்பட்டினம் கடற்கரைக்கு சென்றார்.

அங்குள்ள காளி கோவில் அருகே சுவேதா கடலில் குதித்தார். அவரை பல இடங்களில் தேடினர். அவரது மாமியார் இது குறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்வேதாவை தேடி வந்தனர். நள்ளிரவு 12 மணி அளவில் விசாகப்பட்டினம் கடற்கரையில் சுவேதா பிணமாக மிதந்தார். ஸ்வேதாவின் பிணத்தை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சுவேதாவின் அறையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஸ்மைலி பொம்மையுடன் வெள்ளை பேப்பரில் ‘எல்லாவற்றிற்கும் ஒரு பெரிய நன்றி’ என்று சுவேதா மணிகண்டனுக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் ‘நான் இல்லாமல் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று எனக்கு எப்போதும் தெரியும். உங்களுக்கு உண்மையான வலி இருக்காது.

எவ்வாறாயினும் உங்கள் எதிர்காலம். புதிய வாழ்க்கைக்கு ஆல் தி பெஸ்ட். பேசுவதற்கு நிறைய இருந்தாலும்.. நான் எதுவும் பேசவில்லை. உனக்கு எல்லாம் தெரியும். உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்’ என தெரிவித்துள்ளார். ரூ.10 லட்சம் வரதட்சணை போதவில்லை எனக்கூறி மாமியார் தொல்லையால் சுவேதா உயிரை மாய்த்துக்கொண்டதாக அவரது தாய் ரமா கதறி அழுதார். இதுகுறித்து போலீசார், உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.