தென்கொரியாவில் நிறுத்தப்படும் அமெரிக்க அணுவாயுத நீர்மூழ்கிக் கப்பல் – புதிய ஒப்பந்தம்!
அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து புதிய விரிவுபடுத்தப்பட்ட அணுச்சக்தி ஒப்பந்தத்தை அறிவித்துள்ளன.
வட கொரியாவிடமிருந்து தொடரும் அச்சுறுத்தல் நிலைமையில் இரு நாடுகளும் இந்த புதிய உடன்பாட்டைச் செய்துள்ளன.
தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) முதல் தடவையாக உத்தியோகபூர்வ பயணமாக அமெரிக்கா சென்றுள்ளதுடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தபோது விரிவான புதிய ஒப்பந்தம் தொடர்பில் அறிவிக்கப்பட்டது.
40 ஆண்டுகளின் பின்னர் முதன்முறையாக அணுவாயுத நீர்மூழ்கிக் கப்பல்களை தென்கொரியாவில் நிறுத்த அமெரிக்கா திட்டமிடுவதாக அதிபர் பைடன் கூறியுள்ளார்.
வட கொரியா கண்டம் விட்டுக் கண்டம் பாயும் புவியீர்ப்பு ஏவுகணைகளை அடிக்கடி சோதித்து வரும் சூழ்நிலையில், அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து இவ்வாறான உடன்படிக்கை செய்துள்ளன.
தென்கொரியா தன்னிச்சையாக அணுவாயுதத் திட்டத்தை செயல்படுத்தாது என தென்கொரிய அதிபர் யூன் மீண்டும் உறுதியளித்துள்ளார்.
குறித்த ஒப்பந்தத்தின் முதல் கட்டமாக புவியீர்ப்பு ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா தென்கொரியாவுக்கு அனுப்பவுள்ளது.