சீன, உக்ரைன் அதிபர்களின் முதலாவது கலந்துரையாடல்!!
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பிறகு சீன, உக்ரேனிய அதிபர்களுக்கிடையிலான முதலாவது உரையாடல் இடம்பெற்றுள்ளது.
சீன அதிபர் சி சின்பிங் (Xi Jinping) மற்றும் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) ஆகிய இருவரும் நேற்று (26) தொலைபேசியில் உரையாடி இருக்கின்றனர்.
ரஷ்ய படையெடுப்பின் பின் இரு நாட்டு அதிபர்களுக்கும் இடையில் நடக்கும் முதலாவது உரையாடல் இதுவாகும்.
ரஷ்யாவுடன் சீனா நெருங்கிய உறவைப் பேணி வருவதாகவும், இரு தரப்பு பிரச்சனையை தீர்க்க சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்புகளுடனும் சீனா பேச்சுவார்த்தை நடத்தும் என சி சின்பிங் கூறியுள்ளார்.
சீன அதிபருடனான நீண்ட நேரக் கலந்துரையாடல் அர்த்தமுள்ளதாக இருந்தது என உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.
இருதரப்பு உறவுகள், உக்ரைனுக்கு நியாயமான, நிலையான அமைதியைத் தரும் வழிகள் ஆகியவற்றைக் கலந்துரையாடியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.