வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதிலடி – அம்பலமானது அமெரிக்காவின் திட்டம் !!
வடகொரியாவின் தீவிரமான ஏவுகணை சோதனைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 1981 ஆம் ஆண்டிற்கு பின்னர் முதல் முறையாக தென்கொரியாயாவில் அமெரிக்காவின் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் நிலை கொள்வதற்கான திட்டம் பகிரங்க படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க கடற்படையில் அமெரிக்க அணு ஆயுதங்களை காவி செல்லக்கூடிய இந்த ரக ஏவுகணை கப்பல்களின் 14 கலன்கள் அமெரிக்காவிடம் உள்ளது.
இதில் ஒரு கலன் தான் தென்கொரியாவிற்கு செல்லவுள்ளது. இந்த கப்பல்களில் உள்ள ஏவுகணைகள் துல்லியமானதும் அதிக சக்தி வாய்ந்ததுமானதும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.