‘புலி’யை எதிர்க்கும் சஜித் ‘கழுதை’யை கூப்பிடுகிறார் !!
பாராளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியனை அமைச்சர்களான அலிசப்ரி, மனுஷ நாணயக்கார ஆகியோர் புலி,இனவாத முட்டாள், மதவாதி என விமர்சித்தமைக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி போர்க்கொடி தூக்கியது.
பாராளுமன்றம் வியாழக்கிழமை (27) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
அப்போது சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்த சாணக்கியன், அமைச்சர்களான மனுஷ நாணயக்கார ‘இனவாதி,புலி’ என்றும் அமைச்சர் அலி சப்ரி ‘இனவாதமுட்டாள்,மதவாதி ‘ என்றும் பாராளுமன்றத்துக்கு பொருத்தமற்ற வார்த்தைகளை பிரயோகித்து தன்னை விமர்சித்ததாக சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
இதனையடுத்து எழுந்த வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி சாணக்கியன் எம்.பி. யுடனான வாதத்தின் போது அந்த சூழ்நிலையில் நான் பாராளுமன்றத்துக்கு பொருத்தமற்ற வார்த்தைகளை பிரயோகித்து உரையாற்றியிருந்தால் அதற்கு கவலை தெரிவித்துக் கொள்கிறேன்,அந்த வார்த்தைகளை வாபஸ் பெற்றுக் கொள்வதுடன் சாணக்கியன் எம்.பி.யிடம் மன்னிப்புக் கோருகிறேன் என்றார்.
இதன்போது எழுந்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச 225 உறுப்பினர்களும் மக்கள் பிரதிநிதிகளே .மக்கள் தெரிவு,தேசிய பட்டியல் என்ற வேறுபாடு கிடையாது.மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உரையாற்றுவதற்கு அனைவருக்கும் பொறுப்பு உண்டு.பேச்சு சுதந்திரம் உள்ளது என்பதால் விரும்பிய அனைத்தையும் குறிப்பிட முடியாது.ஒழுக்கத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.
நீங்கள் சாணக்கியன் எம்.பி. யை விமர்சித்த வார்த்தைகள் தவறு. உங்களை நான் மதிக்கின்றேன்.எனவே நீங்கள் மன்னிப்புக்கேட்பது மட்டுமன்றி அந்த வார்த்தைகளை ஹன்சாட்டிலிருந்தும் நீக்க வேண்டும் என்றார்.
சஜித் பிரேமதாச இவ்வாறு கூறும்போது அரச தரப்பினர் சிலர் கூச்சலிட்டனர். அப்போது அவர்களுடன் தர்க்கப்பட்ட சஜித் பிரேமதாச நான் ”கழுதைக்கதை ”கூறவில்லை என்றார்.
இதன்போது எழுந்த அரச தரப்பு எம்.பி.யான பிரேம்நாத் சி தொல வத்த , எதிர்க்கட்சித்தலைவர் ”புலி”என்ற வார்த்தைக்கு எதிர்ப்புத்தெரிவித்துக்கொண்டு ”கழுத்தை” என்ற வார்த்தையை இங்கு பயன்படுத்தினார். அதனை நாங்கள் எதிர்க்கின்றோம் என்றார்.
இதற்கு விளக்கமளித்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ,நான் ”கழுதைக்கதை” என்றுதான் கூறினேன்.”கழுதை” என்று கூறவில்லை. சிலர் பொருத்தமானதைக் கூறுகின்றனர் என்றார்.