ரூ.4.72 லட்சம் கோடி செலவில் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 3,000 கி.மீ.க்கு ரயில்பாதை: சீனா புதிய திட்டத்தால் பரபரப்பு!!
சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்டத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 3,000 கி.மீ. தூரத்துக்கு ரூ.4.72 லட்சம் கோடியில் சீனா ரயில்பாதை அமைக்க திட்டமிட்டுள்ளது. ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பிய நாடுகளை சாலை மற்றும் கடல் மார்க்கமாக இணைக்கும் வழித்தடங்களை உருவாக்கி, சர்வதேச வர்த்தகத்தில் சீனாவின் பலத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக, சர்வதேச பொருளாதார பாதை என்ற கனவு திட்டத்தை சீன அதிபர் ஜின்பிங் கடந்த 2013ம் ஆண்டில் தொடங்கி வைத்தார்.
இதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள க்வாதார் துறைமுகத்தில் இருந்து சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் அதிகம் நிறைந்த வர்த்தக நகரான காஷ்கர் வரையிலான 3,000 கி.மீ. தூரத்துக்கு ரூ.4.72 லட்சம் கோடியில் சீனா ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை சீனா தொடங்கியுள்ளது. இதற்கான நில அளவீட்டு பணிகளை சீன அரசு ரயில்வே துறையின் உள்கட்டமைப்பு மற்றும் வடிவமைப்பு பிரிவு மேற்கொண்டுள்ளது.