;
Athirady Tamil News

திருடர்களுடன் நோ ‘டீல்’ !!

0

வரிக்கு மேல் வரி விதித்து மக்களை ஒடுக்கும் ஊழல் நிறைந்த அரசாங்கத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியினதோ அல்லது ஐக்கிய மக்கள் கூட்டணியினைச் சேர்ந்த எந்தவோர் உறுப்பினரும் கைகோர்க்க மாட்டார்கள் எனவும், இந்நாட்டை கொள்ளையடித்து, ஏமாற்றி, ஏலம் விட்டு, குடும்ப ஆட்சி நடத்தும் நபர்களுடன் எந்தநிலையிலும் ஒன்றிணைந்து ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்ள மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

டொலர் திருட்டில் ஈடுபட்டவர்கள்,இந்த நாட்டிலிருந்து அரச வளங்களையும், டொலர்களையும் திருடிஅழித்தவர்கள், பண்டோரா பத்திரங்கள் மூலம் வெளிப்பட்ட மோசடிக்காரர்கள் இந்நாட்டிலோ,அல்லது உலகின் எந்நாட்டிலோ இருந்தாலும் எத்தகைய தகுதி தராதரங்களும் பார்க்காமல் இந்நாட்டின் சட்டத்தின் முன்நிறுத்தப்படுவார்கள் எனவும், திருடப்பட்ட பணம் மீண்டும் நாட்டிற்குள் கொண்டு வரப்படும் என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தி தற்போதைய அரசாங்கத்துடன் இணையும் என ஜனாதிபதி நினைத்துக் கொண்டிருந்தால் அது வெறும் கற்பனையே எனவும்,நாட்டை அழித்த ராஜபக்ஷர்களுடன் தமக்கோ அல்லது தமது கட்சிக்கோ எந்தவித தொடர்புமில்லை என்றார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கை தொடர்பிலான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்கள் மீது வரி விதிப்பதாகப் பேசும் தற்போதைய அரசாங்கம்,பண்டோரா பத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பணத்தையும் வளங்களையும் எவ்வாறு எமது நாட்டிற்குத் திரும்பப் பெறுவது என்பதில் இதுவரை கவனம்செலுத்தவில்லை எனவும், ஆனால் இழந்த வளங்களை மீட்பதற்கான சட்டமும் அதிகாரமும் ஐக்கிய மக்கள்சக்தி அரசாங்கத்தில் அமுல்படுத்தப்பட்டு பணம் மீண்டும் நாட்டுக்குள் கொண்டுவரப்படும் என எதிர்க்கட்சித்தலைவர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தை நாடியது நல்லதுதான் என்றாலும் அவர்களுடன் இணக்கப்பாட்டுக்கு வந்தஒப்பந்தங்கள் தவறானவை எனவும், இந்த உடன்படிக்கைகளில் மக்களைப் பாதிக்கும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதால் அவை திருத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக்கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.