ஷஷி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு !!
ஷஷி வீரவன்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையை எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
சட்டவிரோதமான இராஜதந்திர கடவுச்சீட்டைப் பெற்றதாக ஷஷி வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (28) கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.