பூதத்தின் சடலமா.. குடோனை தோண்டும்போது.. ஐயோ, அதென்ன வித்தியாசமான உருவம்.. மிரண்ட உள்ளூர் மக்கள் !!
மெக்சிகோ நாட்டில் கட்டுமான பணியின்போது பழைய கிடங்கு ஒன்றில் விசித்திரமான உருவம் கொண்ட சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பூதத்தின் சடலமாக இருக்கலாம் என்று உள்ளூர் மக்கள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.
மெக்சிகோவின் வடகிழக்கு பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நகரமான சாண்டா மரியா ரெக்லா பகுதியில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பழைய கிடங்கு ஒன்று இடிக்கப்பட்டு அதன் இடிபாடுகள் அப்புறப்படுத்தப்பட்டன. இப்படி இடிபாடுகளை அப்புறப்படுத்தும்போதுதான் கட்டுமான பணியாளர்கள் ஒரு விசித்திரமான உயிரினத்தின் சடலத்தை கண்டு பிடித்துள்ளனர்.
முற்றிலும் சிதைந்து போன நிலையில் உள்ள இந்த சடலத்திற்கு இரண்டு கைகள், இரண்டு கால்கள் நீளமான வால் மற்றும் நகங்களுடன் கூடிய விரல்களும் இருக்கின்றன. இதை பார்த்த கட்டுமான பணியாளர்கள் சடலத்தை அப்புறப்படுத்த மறுப்பு தெரிவித்துவிட்டனர். ஏனெனில் இது பார்ப்பதற்கு பூத் போன்ற தோற்றத்தை கொண்டிருப்பதால் ஏதேனும் அமானுஷ்ய சக்தி கொண்ட உயிரினமாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர். இந்த விஷயம் ஊர் முழுவதும் பரவியதையடுத்து ஆய்வாளர்கள் வந்து இந்த உடலை அப்புறப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அந்த பகுதி மேயர் கூறுகையில், “இந்த விஷயம் கொஞ்சம் விவகாரமானதுதான். ஏனெனில் இங்குள்ள மக்களுக்கு என சில நம்பிக்கைகள் இருக்கின்றன. இந்த நம்பிக்கையை தாண்டி நாம் எதையும் செய்துவிட முடியாது. எனவே ஆய்வாளர்கள் இந்த சடலத்தை ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வின் முடிவில்தான் உண்மை என்ன என்பது தெரிய வரும். உள்ளூர் மக்கள் இதனை குட்டி பூதம் என்று கூறி வருகின்றனர். எப்படி இருப்பினும் அனைவரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
உள்ளூர் மக்களில் பழங்குடியினர் இந்த உருவத்தை பார்த்துவிட்டு இது ‘நகுவாலின்’ சடலம்தான் என்று கூறுகின்றனர். நகுவால் என்பது மாயன் சமூக மக்கள் வாழ்ந்த காலத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு விசித்திரமான உயிரினமாகும். அதாவது மாயன் கால மக்களில் மந்திரவாதியாக இருக்கும் நபர் ஒருவர் விலங்காகவும், அதே நேரத்தில் மனிதனாகவும் மாறும் திறன் பெற்றவராக இருந்ததாக குறிப்புகள் சொல்கின்றன. இவர் தனது சக்தியை பயன்படுத்தி நன்மை தீமை போன்றவற்றை செய்கிறார் என்றும் மாயன் மக்களின் குறிப்புகள் கூறுகின்றன.
இவர் தனது சக்தியை கொண்டு இயற்கையை ஆட்டி படைப்பார் என்றும் கூறுகின்றனர். ஆகு இந்த நகுவாலின் சடலம்தான் இது என்று மெக்சிகோ பழங்குடியினர் கூறுகின்றனர். மேலும் அவர்கள் கூறியதாவது, “பொதுவாக மாயன் காலண்டரில் ஒவ்வொரு தினத்திற்கும் ஒவ்வொரு உயிரினங்கள் பொறுத்தி பார்க்கப்படுகிறது. இந்நிலையில் யார் எந்த தினத்தில் பிறந்தார்களோ அந்த தினத்தில் என்ன விலங்கு குறிப்பிடப்பட்டுள்ளதோ அந்த விலங்கின் சாராம்சத்தை அந்த நபர் பெற்றிருப்பார். உதாரணமாக நாய் தினத்தில் ஒருவர் பிறக்கிறார் எனில் அவர் நாய்களின் குணங்களை பெற்றிருப்பாார்.
இது மாயன் மக்களின் விநோத கலாச்சாரங்களில் ஒன்று. அப்படி பிறந்தவல்தான் நகுவால். அவருடைய சக்தி அதியமானது. அவரை நாம் பாதுகாக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளனர். இந்த விவகாரம் பல்வேறு யூகங்களுக்கு வலி வகுத்துள்ள நிலையில் சில ஆய்வளர்கள் தங்களது கணிப்பு குறித்து கூறியுள்ளனர். அதாவது “இது கருவில் இருந்த ஒரு நாய் அல்லது பூனையாக இருக்கலாம்” என்று கூறுயுள்ளனர். எப்படியாயினும் இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்து முழு அறிக்கை வெளி வந்தால் மட்டுமே உண்மை தெரிய வரும்.