மணிப்பூர் மாநிலத்தில் முதல்-மந்திரி பங்கேற்க இருந்த விழா மேடைக்கு தீவைப்பு: மர்ம கும்பல் தப்பியோட்டம்!!
மணிப்பூர் மாநில முதல்-மந்திரி பைரன்சிங். இவர் இன்று சரத்சந்திரபூர் மாவட்டத்தில் விளையாட்டு மைதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க இருந்தார். இதற்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேலும் மேடையின் முன்பு பொதுமக்கள் அமர நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன.
நேற்று நள்ளிரவு மர்ம கும்பல் திடீரென அங்கு சென்று நாற்காலிகளை அடித்து உடைத்தனர். மேலும் பந்தலுக்கும் தீவைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். போலீசாரும் அங்கு சென்று மேடைக்கு தீவைத்த கும்பல் யார்? எதற்காக தீவைக்கப்பட்டது என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.