;
Athirady Tamil News

24 இந்திய மாலுமிகளுடன் அமெரிக்க கப்பல் சிறைபிடிப்பு!!

0

அமெரிக்காவுக்கு சொந்தமான அட்வான்டேஜ் சுவீட் என்ற எண்ணெய் கப்பல் குவைத்தில் இருந்து ஹூஸ்டன் நகருக்கு சென்று கொண்டு இருந்தது. இந்த கப்பலில் 24 இந்திய மாலுமிகள் பணியில் இருந்தனர். அந்த கப்பல் ஓமன் தலைநகர் மஸ்கட் அருகே கடற் பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த ஈரான் கடற்படை வீரர்கள் அமெரிக்க எண்ணெய் கப்பலை சிறைப்பிடித்தனர். ஈரான் கடற்பகுதிக்குள் கப்பல் நுழைந்ததாக கூறி அந்நாடு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு அமெரிக்கா தனது எதிர்ப்பை தெரிவித்து உள்ளது. தங்கள் நாட்டு கப்பல் சர்வதேச எல்லையில் பயணித்த போது ஈரான் சிறை பிடித்து உள்ளதாகவும், இது சர்வதேச சட்டம், மற்றும் பிராந்திய பாதுகாப்பு நிலை தன்மைக்கு எதிரானது. இதனால் உடனடியாக கப்பலை ஈரான் விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளது. இந்த நிலையில் ஈரான் நாட்டு படகு மீது அமெரிக்க எண்ணெய் கப்பல் மோதியதாகவும், இந்த சம்பவத்தில் ஈரான் படகில் இருந்த பலர் காயம் அடைந்ததாகவும், 2 பேர் மாயமாகி விட்டதாகவும் அங்குள்ள செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.