உக்ரைனில், ரஷ்ய படை தாக்குதலில் 21 பேர் பலி!!
உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை, டிரோன் தாக்குதலில் 21 பேர் பலியாயினர். மேலும், 21 பேர் படுகாயமடைந்தனர். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 14 மாதங்களாக போர் நடந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா நேற்று அடுத்தடுத்து டிரோன்,ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. தலைநகர் கீவ் நகரை நோக்கி ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ரஷ்யா ஏவியது.
உமான் நகரில் உள்ள 9மாடி குடியிருப்பு மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 19 பேர் பலியாயினர். 17 பேர் படுகாயமடைந்தனர். அதே போல், உக்ரைன் கிழக்கு பகுதியான டேனிப்ரோவில் ரஷ்யாவின் தாக்குதலில் 2 பேர் பலியாயினர்.