கனடாவில் வசிப்போருக்கு ஓர் அவசர எச்சரிக்கை – இந்த இடங்களுக்கு செல்லவேண்டாம் !!
கனடாவின் மேற்குப் பகுதி மக்களுக்கு காலநிலை தொடர்பில் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது நிலவும் குளிர்காலம் மாற்றமடைந்து வசந்த காலம் ஆரம்பமாகும் நிலையில் வெப்ப நிலையில் திடீர் அதிகரிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
எனவே இந்தப் பகுதிகளில் பனிப்பாறை சரிவுகள் இடம்பெறலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலையை அதிகமான நாட்களில் கூடுதல் அளவில் அனேகமான மேற்குப் பகுதி மலைத்தொடர்களில் பனிப்பாறை சரிவு ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கனடாவில் பனிப்பாறை சரிவு காரணமாக இந்த ஆண்டில் 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.