ஜேர்மன் நிறுவனத்தை கைப்பற்றியது ரஷ்யா – எதிரி நாடுகளுக்கு பதிலடி..!
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து, பல நாடுகளிலுள்ள ரஷ்யாவுக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டன.
அந்த சொத்துக்களை விற்று, அதிலிருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு, உக்ரைனை கட்டியெழுப்ப திட்டமிடப்பட்டுவருகிறது.
இந்நிலையில், அதற்கு பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கையாக, ஜேர்மனி மற்றும் பின்லாந்துக்கு சொந்தமான நிறுவனங்கள் இரண்டை தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துள்ளது ரஷ்யா.
ஜேர்மனிக்கு சொந்தமான Uniper SE மற்றும் பின்லாந்துக்கு சொந்தமான Fortum Oyj ஆகிய நிறுவனங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது.
அது தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார் புடின்.
ரஷ்யாவின் நண்பர்களல்லாத நாடுகள் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிரெம்ளின் வட்டாரம் தெரிவித்துள்ளது.
அதாவது, மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு சொந்தமான நிறுவனங்களைக் கைப்பற்றியுள்ளதற்கு பழிக்குப்பழி வாங்கும் விதமாகவே, ரஷ்யாவும் ஐரோப்பிய நாடுகளுக்கு சொந்தமான நிறுவனங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.