;
Athirady Tamil News

கர்நாடகத்தில் ஆண்டுக்கு 5 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இலவசம்: குமாரசாமி தேர்தல் அறிக்கை வெளியீடு !!

0

கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி வெற்றி பெற்றால் நாங்கள் அமல்படுத்த போகும் திட்டங்களை இதில் கூறியுள்ளோம். குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். மகளிர் சுயஉதவி குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதங்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.6 ஆயிரம் உதவித்தொகை, விதவை பெண்களுக்கான உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும். அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் ரூ.5 ஆயிரம் வரை உயர்த்தப்படும். 15 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உயர்நிலை பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும். முதல் நிலை கல்லூரிகளில் படிக்கும் 18 வயது பூர்த்தியான பொருளாதாரத்தில் நலவுற்ற மாணவர்களுக்கு மின்சார ஸ்கூட்டர்கள் வழங்கப்படும். நிமான்ஸ் ஆஸ்பத்திரி போல் 500 படுக்கைகளை கொண்ட நரம்பியல் ஆஸ்பத்திரி அமைக்கப்படும். எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, இதய நோய், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்கிறவர்களுக்கு முதல்-மந்திரியின் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.

6 ஆயிரத்து 6 கிராம பஞ்சாயத்துகளில் தலா 30 படுக்கைகளுடன் கூடிய உயர்தர ஆஸ்பத்திரி அமைக்கப்படும். விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி, இளம் விவசாயிகளை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை, விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை, விவசாய பம்புசெட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வினியோகம் வழங்கப்படும். மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும். கர்நாடகத்தின் மொத்த மக்கள்தொகையில் மத சிறுபான்மையினர் 20 சதவீதம் பேர் உள்ளனர். அவர்களுக்கு பட்ஜெட்டில் 5 சதவீத நிதி ஒதுக்கப்படும். புதிதாக தொழில் தொடங்குவோருக்கு ரூ.10 லட்சம் மானியம், சிறு தொழில் தொடங்குவோருக்கு ரூ.2 லட்சம் மானியம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.2,500 ஆக உயர்த்தப்படும். போலீசாரின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும்.

புதிதாக வக்கீல் தொழில் தொடங்குவோருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும். பதிவு செய்யப்பட்ட காவலாளிகளுக்கு மாதம் ரூ.2,000, பொருளாதார ரீதியாக நலிவுற்ற நிலையில் உள்ள ஆட்டோ டிரைவர்களுக்கு மாதம் ரூ.2,000 நிதி உதவி வழங்கப்படும். முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு மீண்டும் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதி திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். பெங்களூரு நகருக்கு குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ள மேகதாது திட்டம் அமல்படுத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.