மே மாத இறுதிக்குள் கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைக்க தீர்மானம்!!
மே மாத இறுதிக்குள் கல்லூரிகளுக்கு புதிய மாணவர் குழுக்கள் இணைத்துக் கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த நேற்று (28) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்
மாணவர்களுக்கு ரூ. 5000 உதவித்தொகை மற்றும் வங்கிகள் மூலம் பணம் செலுத்தும் அடிப்படையில் ரூ. 15,000 கடன் தொகையும் வழங்கப்படுகிறது.