’ரத்மலானே குடு அஞ்சு’ இன்டர்போல் பொலிஸாரால் கைது!!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ரத்மலானே குடு அஞ்சு என்று அழைக்கப்படும் சிங்ஹாரகே சமிந்து சில்வா பிரான்சில் வைத்து சர்வதேச பொலிஸ் பிரிவான இன்டர்போல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சர்வதேச பொலிஸாரால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரும், பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான ரத்மலானே குடு அஞ்சு, வெளிநாட்டில் இருந்து கொண்டு இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வர்த்தகத்தை முன்னெடுத்து வந்தார்.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறின் அடிப்படையில் மனைவி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரான்ஸில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.