அவதூறு வழக்கில் இதுவரை யாருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்படவில்லை- ராகுல்காந்தி தரப்பு வாதம்!!
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது ராகுல்காந்தி கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் செய்தார். அப்போது மோடி குடும்ப பெயர் தொடர்பாக அவதூறாக பேசியதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இதைதொடர்ந்து ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த மார்ச் 23-ந்தேதி அவதூறு வழக்கில் தொட ரப்பட்டது. இந்த வழக்கு ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீடு செய்யும் வகையில் 30 நாட்களுக்கு அவகாசம் கொடுத்து ஜாமீன் வழங்கியது.
இதைத் தொடர்ந்து அவரது மக்களவை எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவிடப்பட்டது. 2 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ராகுல்காந்தி சூரத் செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த சூரத் செசன்ஸ் கோர்ட்டு கடந்த 20-ந்தேதி ராகுல்காந்தியின் மேல் முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க கோரி அவர் முறையிட்டார். இந்த மனுவை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி கீதா கோபி பதவி விலகினார்.
இதைத்தொடர்ந்து நீதிபதி ஹேமந்த் பிரச்சக் இந்த மனுவை விசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ராகுல்காந்தியின் மேல் முறையீடு மனு விசாரணை குஜராத் ஐகோர்ட்டில் இன்று தொடங்கியது. ராகுல்காந்தி தரப்பில் மூத்த வக்கீல் சிங்கி இந்த வழக்கில் ஆஜராகி வாதாடியதாவது:- 2 ஆண்டு சிறை தண்டனையை ஒருநாள் குறைவாக வழங்கி இருந்தால்கூட எம்.பி. பதவியை இழக்க நேரிட்டு இருக்காது. நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அவதூறு வழக்கில் அதிக பட்ச தண்டனையாக 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.